TAMILCINEMA
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மசாலாப் படங்களுக்கான சமையல் குறிப்புகள்!

Go down

மசாலாப் படங்களுக்கான சமையல் குறிப்புகள்! Empty மசாலாப் படங்களுக்கான சமையல் குறிப்புகள்!

Post by Admin Mon Oct 14, 2013 6:55 am

செஃப் ஷங்கர்
தேவையான பொருட்கள்:
மார்க்கெட்டில் உச்சத்தில் இருக்கும் ஹீரோ, ஹீரோயின் கால்ஷீட் இரண்டு வருடங்கள், ஹோல்சேல் விற்பனையில் பெயின்ட் டப்பா ஏழு லாரிகள், கேள்வியே பட்டிராத வெளிநாட்டு லொகேஷனுக்கான விசா நான்கு மாதங்கள், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ஐந்து பாடல்கள், பீட்டர் ஹெய்னின் அதிரடி சண்டைகள் மற்றும் ஒரு டஜன் சேனல்களின் மைக்.
செய்முறை:
முதலில் சாதாரணமாக வளைய வரும் ஹீரோ, திடீரென்று அக்கிரமக்காரர்களைத் தண்டிக் கும் ஆபத்பாந்தவனாக மாறுவதற்கான வலுவான காரணத்தைச் சொல்லும் ஃப்ளாஷ்பேக்கை வாணலியில் ஊற்றி சூடேற்றிக்கொள்ள வேண்டும். இதற்கிடையில் ஏ.ஆர்.ரஹ்மான் போட்டுக் கொடுத்திருக்கும் ஹிட் பாடல்களை ஆங்காங்கே தூவ வேண்டும். ஒரு ராணுவத்தால் செய்ய முடியாததை பீட்டர் ஹெய்ன் உதவியுடன் ஹீரோ ஒற்றை ஆளாக செய்து முடித்தவுடன் வாணலியை இறக்கிவிட வேண்டும். இறுதியாக மசாலாவிற்கு மணம் சேர்க்க, ஒரு வார கால்ஷீட்டில் அள்ளிக்கொண்டுவந்து கொட்டிய கோர்ட்டுக்கு வெளியே கூடியிருக்கும் துணை நடிகர்கள் தரும் கருத்து கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துப் பரிமாறி னால் சூடான, சுவையான கருத்துக் குத்து ஹிட் படம் ரெடி!
[You must be registered and logged in to see this image.]செஃப் செல்வராகவன்
தேவையான பொருட்கள்:
உருப்படாத ஹீரோவும் அவருடைய உதவாக்கரை நண்பர்களும் ஒரு கட்டு, உதவாக்கரை நண்பனை உபதேசித்துக் கரை சேர்க்கும் அழகிய காதலி ஒரு கப், மனநல மருத்துவரின் அப்பாயின்மென்ட் அடுத்த ஆறு மாதங்களுக்கு.
செய்முறை:
பீர் பாட்டிலோடும் பீடியோடும் உறவாடும் நண்பர்களை ஒண்டுக்குடித்தன அறை ஒன்றில் போட்டு வாட்டி எடுக்கவேண்டும். உதவாக்கரை நண்பனைப் பார்க்க வரும் காதலியை ஹீரோ முதலில் பார்க்கும்போது அவளைப் பிடிக்காத ஹீரோ எண்ணையில் கடுகை அள்ளிப்போட வேண்டும். ஹீரோவின் அப்பாவும் ஹீரோவும் பரஸ்பரம் பொரிந்துகொள்ளும் படி எண்ணெய் ஊற்றவும். முதலில் முட்டிக் கொண்ட ஹீரோ பிறகு ஹீரோயினைக் காதல் மிக்ஸியில் போட்டுச் சுத்தவிட வேண்டும். காதல் சூடு ஏற ஏற, ஏற்கெனவே அரைகுறையாக இருக்கும் ஹீரோவின் மனநிலை முற்றிலும் பிறழ்ந்துவிட வேண்டும். கடைசியில் மனநல மருத்துவரின் ஆலோசனைப்படி ஹீரோ பெரிய ஆளாகியதும், பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கிவைத்துவிட்டு குக்கருக்குப் பதிலாக நாம் விசில் அடிக்க வேண்டும்!
[You must be registered and logged in to see this image.]செஃப் ஹரி
தேவையான பொருட்கள்:
மதுரை மற்றும் மதுரையைத் தாண்டிய தென் தமிழகத்தில் நான்கு மாத லொகேஷன், 37 டாட்டா சுமோக்கள் ரெண்டு லாரி லோடு அரிவாக்கள், கத்திகள், ரெண்டு, மூணு ரேஷன் கடை தேவைப்படும் அளவுக்கு ஆட்கள் இருக்கக்கூடிய கூட்டுக்குடும்பம்.
செய்முறை:
சொந்தக்காரர்களில் ஒருவர் மிகமிக உத்தமராகவும், இன்னொருவர் மிகமிக மோசமானவராகவும் இருப்பது மிகமிகமிக அவசியம். ஊருக்காகவே வாழும் உத்தமரின் பிள்ளையையும், ஊதாரியாகவே வாழும் வில்லனின் குழந்தையையும் ஒரே வாணலியில் போட்டு, காதல் வரும் வரை வறுத்தெடுக்கவும். கேட்கவே காது கூசும் பஞ்ச் டயலாக்குகளை அவ்வப்போது தூவி, காதுஜவ்வு கிழியும் சத்தத்தைச் சேர்த்து, க்ளைமாக்ஸ் சண்டையில் 17 டாடா சுமோக்களை பறக்கவிட்டு தேவையான பதம் வந்ததும் பானையை இறக்கிவிடவேண்டும். சூடான அருவாப் படம் ரெடி!
சீலன்
-vikadan-

Admin
Admin

Posts : 105
Join date : 13/09/2013

https://tamilcinema.forumotion.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum