TAMILCINEMA
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

சூர்யா விலகலுக்கு காரணம் என்ன?

Go down

சூர்யா விலகலுக்கு காரணம் என்ன? Empty சூர்யா விலகலுக்கு காரணம் என்ன?

Post by Admin Mon Oct 14, 2013 6:56 am

[You must be registered and logged in to see this image.]



சூர்யா, பார்த்திபன், சிம்ரன் மற்றும் பலர் நடிக்க, கெளதம் மேனன் இயக்க இருந்த படம் தான் 'துருவ நட்சத்திரம்'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, தனது போட்டோன் கதாஸ் நிறுவனம் மூலம் தயாரிக்க முன்வந்தார் கெளதம் மேனன்.

ஆனால், படம் துவக்கம் முதலே ஏதோ ஒரு பிரச்னை இருந்து வந்தது. த்ரிஷா, அமலா பால், துளசி, சமந்தா என நாயகிகளாக பலரது பெயர்கள் அடிபட்டன. ஆனால், யாருமே நான் தான் 'துருவ நட்சத்திரம்' நாயகி என்று கூறவில்லை.

அதுமட்டுமன்றி, சூர்யாவோ படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று தெரிவிக்காமல், கதையில் இன்னும் நிறைய வேலைகள் இருக்கிறது என்று தெரிவித்து இருந்தார்.

இதனால், அந்தப் படம் டிராப்பாகி விட்டதாக பலரும் நினைத்தார்கள். அதை மெய்ப்பிக்கும் விதமாக சூர்யாவும் லிங்குசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

ஆனால், தற்போது சூர்யாவுக்காக இறங்கி வந்தாராம் கெளதம் மேனன். கதையில் சூர்யா சொன்ன திருத்தங்களை ஏற்று, அதன்படி கதையை மாற்றி அமைத்துள்ளாராம்.

இருப்பினும், சூர்யாவுக்குத் திருப்தி இல்லையாம். எனவே, கெளதம் மேனன் படத்தில் இருந்து விலகிக் கொள்வதாக இரண்டு நாட்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டார். 

சூர்யாவுக்கும், கெளதம் மேனனுக்கும் ஒத்துப் போகாதபடி கதையில் என்னதான் இருக்கிறது? என கோடம்பாக்கத்தில் விசாரித்தோம். 

'மதராசப்பட்டினம்' போல ஆங்கிலேயர் ஆட்சியில் சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு கதை நடக்கிறதாம். மொத்தம் 3 மணி நேர படமாம். அதில், ஒரு மணி நேரம் மட்டுமே சூர்யா வருகிறாராம். 

சூர்யா போலவே இன்னும் சில கதாபாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்திருந்தாராம் கெளதம். 'அப்புறம் ஹீரோனு நான் எதுக்கு?' என சூர்யா கேட்டதும், பிறகு சூர்யாவின் நேரத்தை கொஞ்சம் அதிகரித்தாராம்.

அப்படியும் திருப்தி அடையாத சூர்யா, படத்தில் இருந்து விலகிவிட்டதாகச் சொல்கிறார்கள்.
-vikadan-

Admin
Admin

Posts : 105
Join date : 13/09/2013

https://tamilcinema.forumotion.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum