TAMILCINEMA
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மூடர்கூடம் சினிமா விமர்சனம்

Go down

மூடர்கூடம் சினிமா விமர்சனம் Empty மூடர்கூடம் சினிமா விமர்சனம்

Post by Admin Sat Sep 14, 2013 1:50 am

[You must be registered and logged in to see this image.]நடிகை : ஓவியா
இயக்குனர் : நவீன்
படிப்பறிவே இல்லாத 3 இளைஞர்கள், படிச்ச ஒரு ஆள் 4 பேரும் சந்தர்ப்ப சூழ்நிலையால் கூட்டுக்களவாணி ஆகறாங்க. அவங்க கூட இருக்கும் ஒருத்தனோட சொந்த மாமா வீட்லயே கன்னம் வைக்க பிளான் . ஹவுஸ் அரெஸ்ட் மாதிரி வீட்ல இருக்கறவங்களை எல்லாம் ஹால்ல உட்கார வெச்சு பணம் எங்கேன்னு தேடறாங்க. கிடைக்கலை. எல்லா சொத்து பத்துக்களையும் வேய்க்கானமா பதுக்கிட்டு வழக்கை சந்திக்க தயார். ரெய்டுக்கு ரெடின்னு அறிக்கை விடும் அரசியல்வாதி போல் ஆட்டம் காட்டும் மாமா மற்றும் குரூப் , அவங்களைத்தேடி வரும் வெளி ஆட்கள் இதை வெச்சு ரெண்டரை மணி நேரம் சிச்சுவேஷன் காமெடி திரைக்கதை அமைச்சிருக்காங்க. பாராட்டத்தக்க முயற்சி.
டாக்டர் ராஜசேகர் தம்பி செல்வா நடிச்சு சில வருடங்களுக்கு முன் வந்த கோல்மால் படக்கதையை, பட்டி டிங்கரிங்க் பண்ணி கொஞ்சம் ஆங்காங்கே சென்ட்டிமென்ட் டச் வெச்சு காமெடி மெலோ டிராமா ஆக்கி இருக்காங்க. அந்தப்படமே ஒரு ஹிந்திப்படத்தோட ரீமேக் தான்.. கமல் -கிரேசி மோகன் காம்பினேஷன்ல வந்திருந்தா செம கலக்கு கலக்கி இருக்கலாம்.
நவீன் தான் ஹீரோ, இயக்கம், தயாரிப்பு எல்லாம். படிச்ச கம்ப்யூட்டர் இளைஞன் மாதிரி கன கச்சிதமான தோற்றம் . முக பாவனைகள் கை கொடுக்காட்டியும் திரைக்கதை காப்பாத்திடுது.
நாடோடிகள் படத்துல காதோட அடி வாங்கி அனுதாபத்தை சம்பாதிச்ச சென்றாயன் தான் 4 பேரில் கவனம் கவர்பவர் . மனுஷன் கலக்கிட்டார் . நல்ல வாய்ப்பு கிடைச்சா இவர் முன்னணி காமெடி கம் குணச்சித்திர நடிகர் ஆவது உறுதி.
நாயகி ஓவியா. ஷாக் சர்ப்பரைஸ் . அதிக டிரஸ் சேஞ்ச் பண்ணவெல்லாம் வாய்ப்பில்லை . திரைக்கதைப்படி ஒரே ஹாலில் கதை பயணிப்பதால் படம் பூரா ஒரே மாடர்ன் டிரசில் வர வேண்டிய சூழல். தன் பங்குக்கு சிரசாசனம் செய்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறார்.
ஜெயப்பிரகாஷ் உட்பட படத்தில் வரும் அனைத்து கேரக்டர்களும் கதையின் சிச்சுவேஷன் காமெடித்தன்மையை உணர்ந்து கலக்கி இருக்கிறார்கள் . வெல்டன்.

Admin
Admin

Posts : 105
Join date : 13/09/2013

https://tamilcinema.forumotion.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum