TAMILCINEMA
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தங்க மீன்கள் ‘நொந்த மீன்’களா..? : இன்னும் அடங்காத ஆத்திரத்தில் டைரக்டர் ராம்!

Go down

தங்க மீன்கள் ‘நொந்த மீன்’களா..? : இன்னும் அடங்காத ஆத்திரத்தில் டைரக்டர் ராம்! Empty தங்க மீன்கள் ‘நொந்த மீன்’களா..? : இன்னும் அடங்காத ஆத்திரத்தில் டைரக்டர் ராம்!

Post by Admin Thu Sep 19, 2013 1:34 am



[You must be registered and logged in to see this link.]
டைரக்டர் ராமின் ‘தங்கமீன்கள்’ படத்தை ஆளாளுக்கு துவைத்து காயப்போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதில் நீங்க மட்டும் தான் பாக்கி என்று சொல்லும் அளவுக்கு அந்த லிஸ்ட்டில் ‘தி இந்து தமிழ்’ நாளிதழும் சேர்ந்து கொண்டது.
எல்லாரும் ஏறிப்பாத்த தேங்கா மரத்துல என்னால மட்டும் தான் 800 தேங்காய் பறிக்க முடிஞ்சது என்ற கணக்கில் கொஞ்சம் கூட சளைக்காமல் எல்லா விமர்சனங்களுக்கும் பதில்களை கொடுத்து வருகிறார் ராம்.
என் படத்தை ரசிக்கத் தெரியவில்லை, ஒரு தடவை பார்த்து விட்டு விமர்சனம் எழுதினால் எப்படி அதை ஏற்றுக்கொள்வது? என்னுடைய படத்துக்கு எப்படி குறைந்த மதிப்பெண்கள் போடலாம் என்று பல வருடங்களாக விமர்சனம் செய்பவர்களையே வந்து பார் என்று சொல்லும் ராம் முந்தாநாள் வந்த தி இந்து நாளிதழை மட்டும் விட்டுவிடுவாரா என்ன..?
இதோ தி இந்து தமிழ் நாளிதழில் இன்று வெளியான தங்க மீன்கள் படம் குறித்தான விமர்சன கட்டுரைக்கு டைரக்டர் ராமின் வழக்கமான கோபத்தில் அமைந்த அவரது பாணி பதில் :
தந்தைப் பெரியாரிடம்,“ஆங்கிலப் பத்திரிகை ஆரம்பிக்க சொல்கிறீர்களே அய்யா…செய்திகளுக்கு எங்கே போவது?” என ஒருமுறை கேட்டார்களாம். அதற்கு அவர், ‘செய்திக்கா பஞ்சம்…? இன்னத்த ‘இந்து’ பேப்பர் வாங்கீட்டு வா…அதுல அவன் எதையெல்லாம் சரின்னு போட்டிருக்கானோ, அதையெல்லாம் தப்புன்னு எழுது…எதத் தப்புன்னு போட்டிருக்கானோ
அதையெல்லாம் சரின்னு எழுது…’ என்றாராம்.
அதுதான் இன்றைக்கும் சரி போலிருக்கிறது.
அதே “தி இந்து” இப்போது தமிழில்.
“தி இந்து”

இந்து என்கிற மதத்தின் பெயரை தாங்கி வரும் செய்தித்தாளை என்றும் வாங்கக் கூடாது என்ற என் உறுதி இன்று இல்லாமல் போனது.
இன்று என் சொந்தப்பணம் ரூபாய் 4 ஐ நான் செலவழித்து வாங்கும்படி செய்தது தி இந்து. அதன் இந்த தந்திரத்திற்கு என்னுடைய பாராட்டுகள்.
‘தங்கமீன்கள்’ வெளிவந்து மூன்று வாரம் கழித்து அது குறித்தும் என்னைக் குறித்தும் எழுத வேண்டியக் கட்டாயத்தை
ஒரு பத்திரிகைக்கு ஏற்படுத்தி இருக்கிறது இந்தத் திரைப்படம் என்பது தான் இதன் வெற்றி.
புதிதாகத் தொடங்கப்பட்டப் பத்திரிகையின் வியாபாரத்திற்கும் பரபரப்பிற்கும் ”தங்கமீன்கள்” தேவைப்படுகிறது என்பதுதான் அதன்
ரசிகர்களுக்கு கிடைத்த வெற்றி.
தி இந்து நம்மை நம் படைப்பை பாராட்டி எழுதினால் தான் நாம் நம் படைப்பு மீது சந்தேகம் கொள்ள வேண்டி வரும். நம் படைப்பை அவர்கள் இகழும் போதும், தூற்றும் போதும் தான் நம் படைப்பு நேர்த்தியானது என்பது உறுதியாகிறது. அதை உறுதி செய்த ”தி இந்து” விற்கு நன்றிகள்.
ஆறு வருடத்திற்கு முன்பு வந்த ”கற்றது தமிழ்” திரைப்படத்திற்கும் விமர்சனம் செய்வீர்களாக என்று வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம். படைப்பைக் குறித்த விமர்சனத்திற்குத்தான் நாம் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். தனி நபர் எள்ளல்களை நாம் சட்டை செய்வதில்லை.
பிரியங்களுடன்
ராம்
(என்ன செய்ய நான் அந்த ராமில்லை)
பின் குறிப்பு : ராமின் இந்த பதில் கட்டுரைக்கு அவரை திட்டியே நிறைய கமெண்ட்டுகள் வந்திருந்தன. ஆனால் அவைகளை எல்லா நேக்காக டெலிட் செய்து விட்டு தனக்கு ஆதரவான கமெண்ட்ஸ்களை மட்டுமே டிஸ்ப்ளே செய்திருக்கிறார் ராம்.
உங்க நேர்ம எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு டைரக்டர் சார்….

Admin
Admin

Posts : 105
Join date : 13/09/2013

https://tamilcinema.forumotion.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum